/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் குவிந்த உள்ளூர் மக்கள் குதுாகலம்
/
கொல்லிமலையில் குவிந்த உள்ளூர் மக்கள் குதுாகலம்
ADDED : நவ 04, 2024 05:10 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் குவிந்த உள்ளூர் மக்கள், அருவியில் குளித்து குதுாகலமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்-ளது. இதனால், விடுமுறை நாட்களை கொண்டாட, கடந்த, 3 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்-றுலா பயணிகள் கொல்லிமலையில் குவிந்த வண்ணம் இருந்-தனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதாலும், உள்ளூரை சேர்ந்த நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் இங்கு குவிந்தனர். காலையில் மலைக்கு வந்த மக்கள், மாசிலா அருவி, நம் அருவிகளில் குளித்து விட்டு, மாலையில் வீடு திரும்பினர். இதனால், கொல்லிமலையில் நேற்றும், சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.