/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
/
தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
ADDED : அக் 19, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீரில் மூழ்கி
கூலித்தொழிலாளி உயிரிழப்பு
ப.வேலுார், அக். 19--
நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே பொன்மலர் பாளையத்தைச் சேர்ந்த காஞ் சடையான் மகன் பாலமுருகன்,20; கூலி தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். பாலமுருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் காவிரி ஆற்றில் சென்று தேடினர்.
அப்போது காவிரி ஆற்றில் பாலமுருகன் சடலமாக கிடந்தார். வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். உடலை கைப்பற்றி ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

