/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
/
டூவீலர் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
ADDED : டிச 15, 2024 01:25 AM
டூவீலர் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
குமாரபாளையம், டிச. 15-
குமாரபாளையம் நடராஜா நகரை சேர்ந்தவர் விஷ்ணுராம், 19; இவரது நண்பர் பெருமாள், 20; இருவரும் துண்டு மடிக்கும் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு, குமாரபாளையம் - சேலம் சாலை, பள்ளிப்பாளையம் பிரிவு பகுதியில், 'ஹோண்டா ஆக்டிவா' டூவீலரில் இருவரும் சென்றனர். டூவீலரை, விஷ்ணுராம் ஓட்டினார். பெருமாள் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று, டூவீலர் மீது மோதியது. இதில், விஷ்ணுராம் இடுப்பு பகுதியில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. அருகில் இருந்தவர்கள், விஷ்ணுராமை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.