ADDED : அக் 29, 2026 03:50 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி: எருமப்பட்டி அடுத்த பவித்திரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருண், 32; கூலி தொழிலாளி. இவர், கடந்த, 15 காலை, 10:00 மணிக்கு, வீட்டில் இருந்து பழைய குப்பையை தீ வைத்து எரித்துள்ளார்.
அப்போது, தீப்பொறி பறந்து அவரது சட்டையில் விழுந்தது. அதில், ஏற்பட்ட தீயை அணைத்ததால், சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அதற்காக, வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த, 26ல், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
