UPDATED : அக் 29, 2026 05:11 AM
ADDED : அக் 29, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக, கடந்த ஜூலை மாதம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற கொக்கராயன்பேட்டை போலீசார், குடோனில் சோதனை நடத்தி, 2 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன், 25, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, போலீசார் அவரை கைது செய்தனர்.
