/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட்' திட்டத்திற்கு நிலம் அளக்க எதிர்ப்பு
/
'சிப்காட்' திட்டத்திற்கு நிலம் அளக்க எதிர்ப்பு
ADDED : டிச 24, 2025 07:49 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்-பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள், கிராம மக்கள், 'சிப்காட்' எதிர்ப்பு இயக்-கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர், பல்வேறு போராட்-டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் திட்டத்திற்காக நிலங்களை கையகப்ப-டுத்தும் வகையில், போலீஸ் பாதுகாப்புடன், வளையப்பட்டி அடுத்த கஸ்துாரிமலை அருகே, சிப்காட் திட்ட சிறப்பு தாசில்தார் ஜானகி தலைமையிலான வருவாய் துறையினர், நிலம் அளவீடும் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நில அளவீடு பணியை தற்காலிகமாக நிறுத்-தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

