ADDED : டிச 24, 2025 07:49 AM
ப.வேலுார்: துறையூரை சேர்ந்தவர் சீனிவாசன், 40; லாரி டிரைவர். இவர், நேற்று லோடு ஏற்றுவதற்காக, கரூருக்கு லாரியில் சென்று கொண்-டிருந்தார். ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள சிவா தியேட்டர் கார்னர் அருகே, மதியம், 3:00 மணிக்கு லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து லாரியை எடுத்து, சிறிது துாரம் சென்றபோது லாரியில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று கேபினில் இருந்து சீறியது.
லாரியை நிறுத்திய சீனிவாசன், பாம்பை துரத்த முயன்றபோது, இன்ஜின் பகுதிக்குள் சென்று பதுங்கியது.
இதுகுறித்து வேலாயு-தம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், லாரியில் பதுங்கியிருந்த பாம்பை தேடினர். ஒரு மணி நேரம் போராடியும், பாம்பு கிடைக்காததால் ஏமாற்றத்துடன் தீயணைப்பு துறையினர் திரும்பினர். அச்சமடைந்த லாரி டிரைவர் சீனிவாசன், பழைய பைபாஸ் சாலையில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்தார். பின், மாலை, 5:00 மணிக்கு அச்சத்துடன் லாரியை ஓட்டிச்சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

