/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வைகாசி கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு பூஜை
/
வைகாசி கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 14, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: வைகாசி கடைசி வெள்ளியான நேற்று, ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில், சீராப்பள்ளி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.