/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாழவந்தி, செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

ADDED : ஆக 16, 2025 02:20 AM
மோகனுார், மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி, மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பால் அபிஷேகம் நடந்தது. பாலப்பட்டி அடுத்த கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள், புனித நீராடினர். தொடர்ந்து, பால், தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை அடைந்தனர்.
அதையடுத்து, மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் சுவாமிகளுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் சுவாமிக்கு, பல்வேறு வகையான நறுமண பொருட்களால் புஷ்பாஞ்சலி விழா சிறப்பாக நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.