/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
/
வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
ADDED : பிப் 21, 2025 07:26 AM
நாமக்கல்: சேலம் மற்றும் காஞ்சிபுரத்தில், வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
சேலம் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் கவின், தண்டபாணி ஆகியோர் மீது, நேற்று முன்தினம் ரவுடிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும். ஜன., 3ல் காஞ்சிபுரத்தில் ராஜேஷ் என்ற வக்கீல் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதோடு, பாதிக்கப்பட்ட வக்கீல் மீதே பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், நேற்று தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், பரமத்தி, சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு என மாவட்டம் முழுவதும், 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகங்கள் வெளிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.

