ADDED : மே 02, 2025 01:43 AM
மல்லசமுத்திரம்:
வையப்பமலை, சந்தைப்பேட்டையில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் சாலையில், சேலம், ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, மல்லசமுத்திரம் செல்லும் சாலையின் தொலைவை அறிந்துகொள்ளும் வகையில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறையால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் வீசிய பலத்த காற்றால், தாக்குப்பிடிக்க முடியாமல் ஊர் பெயர் பலகை சாய்ந்து கீழே விழுந்தது.
மல்லசமுத்திரம், காளிப்பட்டி, ஆட்டையாம்பட்டி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால், வெளியூர்களிலிருந்து இங்குள்ள கோழிப்பண்ணைகளுக்கும், தறி பட்டறைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான மூலப்பொருட்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு இந்த வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஊர் பெயர் பலகை சாய்ந்து கிடப்பதால், வெளியூர் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய பாதை தெரியாமல் திணற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
எனவே, சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகையை, நேராக நிறுத்தி அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.