/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தோல் தொழிற்சாலை, சிப்காட் கொண்டுவரப்பட்டால் அ.தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்படும்: தங்கமணி
/
தோல் தொழிற்சாலை, சிப்காட் கொண்டுவரப்பட்டால் அ.தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்படும்: தங்கமணி
தோல் தொழிற்சாலை, சிப்காட் கொண்டுவரப்பட்டால் அ.தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்படும்: தங்கமணி
தோல் தொழிற்சாலை, சிப்காட் கொண்டுவரப்பட்டால் அ.தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்படும்: தங்கமணி
ADDED : ஜூலை 27, 2025 12:43 AM
நாமக்கல், ''நாமக்கல் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலை, சிப்காட் கொண்டு வரப்பட்டால், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும்,'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., பேசினார்.
நாமக்கல் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, மாநில மகளிரணி துணை செயலாளர் அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்த நலத்திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயாராக இருக்கிறோம். தி.மு.க.,வினர் எங்களுடன் விவாதிக்க தயாரா.
இந்த மாவட்டத்தில் தோல் தொழிற்சாலை, சிப்காட் கொண்டு வரப்பட்டால், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும். நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்ல இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுமதிக்காவிட்டால், பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அனுமதியோடு, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ''தமிழகத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கே தற்போது பாதுகாப்பு இல்லை. முன்பெல்லாம் ஆடு, மாடு காணோம் என சொல்வார்கள். இப்போது சிறுநீரகம் (கிட்னி) காணோம் என, நாமக்கல்லில் தேடுகின்றோம். இதுகுறித்து கேள்வி கேட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் மழுப்பலாக பதிலளிக்கிறார். 2026ல் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில இலக்கிய அணி இணை செயலாளர் காந்திமுருகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முரளி பாலுசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.