/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
/
அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 16, 2025 02:27 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில், குமாரபாளையம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்தரூபி முன்னிலை வகித்தார். சட்ட தன்னார்வலர் வேல்மு-ருகன் வரவேற்றார்.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர், மாவட்ட நீதிபதி வேலுமயில், குமாரபாளையம் சட்டப்ப-ணிகள் ஆணைக்குழு தலைவர், குமாரபாளையம் உரிமை-யியல் நீதிமன்ற நீதிபதி நவீனா, பேனல் லாயர் சரண்யா ஆகியோர், பள்ளி மாணவ, மாணவியருக்கு போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்தும் அதற்கான தண்-டனை குறித்தும் சிறுவர் சீர்திருத்த சாலை குறித்தும் இவற்றிலி-ருந்து தங்களை பாதுகாத்துகொள்வது எவ்வாறு என்பது குறித்தும் விளக்கி கூறி, சட்ட விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர்.

