/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி இனிப்பு, கார வகைகள் தயாரிக்க உரிமம் கட்டாயம்
/
தீபாவளி இனிப்பு, கார வகைகள் தயாரிக்க உரிமம் கட்டாயம்
தீபாவளி இனிப்பு, கார வகைகள் தயாரிக்க உரிமம் கட்டாயம்
தீபாவளி இனிப்பு, கார வகைகள் தயாரிக்க உரிமம் கட்டாயம்
ADDED : அக் 12, 2024 07:30 AM
பள்ளிப்பாளையம்: தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, உணவு பாது-காப்பு துறையின் உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என, அதி-காரி தெரிவித்தார்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், தீபாவளி பண்டிகையை-யொட்டி பேக்கரிகள், திருமண மண்டபங்களில் மற்றும் பல பகு-தியில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்படும். இதற்கு உரிமம் கட்டாயம் பெற்று இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும் என, பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:சுத்தமான, சுகாதாரமான இடங்களில் மட்டுமே இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்
வகைகளை மீண்டும் பயன்படுத்த கூடாது. தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். இனிப்பு கார வகைகள் தயாரிக்கும்
பணியில் ஈடுபடுவோர், கட்டாயம், உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் சான்று பெற வேண்டும்.
செயற்கை நிறமூட்டி பயன்படுத்த கூடாது, தயாரிக்கும் இனிப்பு, கார வகைள் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த கூடாது.
பள்ளிப்பாளையம் பகுதியில் இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்களில் நாளை (13 தேதி) முதல் தொடர்ந்து ஆய்வு செய்யப்-படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.