/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாழ்வியல் நெறி மற்றும் இறை பாடல்கள் பயிற்சி
/
வாழ்வியல் நெறி மற்றும் இறை பாடல்கள் பயிற்சி
ADDED : அக் 28, 2025 01:47 AM
ராசிபுரம், 'வீ த லீடர்ஸ்' அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச, 'நீட்' தேர்வு பயிற்சி, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு, விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி, சிறு
தானிய உணவு திருவிழா என, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, ராசிபுரம் வீ த லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் வாழ்வியல் நெறி இறைபாடல்கள் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கணபதி விலாஸ் ரைஸ்மில் தெருவில் கண் மருத்துவமனை எதிரே பயிற்சி வகுப்பு வரும் நவ., 6ல் தொடங்குகிறது. ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை பயிற்சி வழங்கப்படும். காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை பயிற்சி வழங்கப்படும். சிவனடியார் பழனிவேல், செல்வம் ஆகியோர் பயிற்சி அளிக்கவுள்ளனர். ஆர்வமுள்ள ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், 9952620762 எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

