/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை ஜோர்
/
பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை ஜோர்
பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை ஜோர்
பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை ஜோர்
ADDED : ஏப் 21, 2024 10:41 AM
ப.வேலுார்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 17, 18, 19 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட நபர்கள், அதிகளவில் மது பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டு, கூடுதல் விலைக்கு விற்று பெரும் லாபம் பார்த்தனர். நேற்று முன்தினம், டாஸ்மாக் கடையில், 150 ரூபாய்க்கு விற்ற மது பாட்டில்கள், 300 ரூபாய்க்கும், பீர் பாட்டில், 300 ரூபாய்க்கும் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.
குறிப்பாக, ப.வேலுார் பகுதிகளில் நன்செய் இடையாறுக்கு செல்லும் சாலை, சுல்தான்பேட்டை சந்தை வளாகம், வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தை அருகிலும் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை ஜோராக நடந்தது. இதேபோல், நல்லுார் கந்தம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தாராளமாக மது விற்பனை நடந்தது.
நேற்று முன்தினம் டாஸ்மாக், பார் அனைத்துக்கும் விடுமுறை அளித்த நிலையில், நல்லுார் கந்தம்பாளையம் டாஸ்மாக் பாரில் மது விற்பனையும், பாரும் செயல்பட்டது. இதுகுறித்து, கந்தம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, டாஸ்மாக் கடை விடுமுறையால் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய அதிகளவில் மது பாட்டில்கள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர். ப.வேலுார் மற்றும் நல்லுார் கந்தம்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, பட்டணம் செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள சந்து கடையில், 24 மணி நேரமும் சரக்கு விற்பனை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு சென்று கேட்டாலும் சரி, நள்ளிரவு சென்று கேட்டாலும் சரி, உடனடியாக சரக்கு கிடைக்கிறது.
அதற்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும். 'குடி' மகன்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், கேட்கிற பணத்தை கொடுத்து சரக்கு வாங்கி மட்டையாகின்றனர். இதனால், விடிந்ததும், 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்படுகிறது.

