/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலுாட்டும் அறைக்கு பூட்டு: தவிப்புக்குள்ளாகும் தாய்மார்கள்
/
பாலுாட்டும் அறைக்கு பூட்டு: தவிப்புக்குள்ளாகும் தாய்மார்கள்
பாலுாட்டும் அறைக்கு பூட்டு: தவிப்புக்குள்ளாகும் தாய்மார்கள்
பாலுாட்டும் அறைக்கு பூட்டு: தவிப்புக்குள்ளாகும் தாய்மார்கள்
ADDED : நவ 21, 2024 01:20 AM
நாமக்கல், நவ. 21-
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள, 'தாய்மார்கள் பாலுாட்டும் அறை' பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பச்சிளம் குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல், முதலைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட், கடந்த, 10 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதனால், நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, டவுன் பஸ், மினி பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. திருச்சி, மோகனுார், சேந்தமங்கலம் செல்லும் பஸ்கள் மட்டும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நின்று செல்கின்றன. இதனால், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனுார், எருமப்பட்டி, ப.வேலுார், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் மட்டும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்ட, 'தாய்மார்கள் பாலுாட்டும் அறை'யை, 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த அறை பாலுாட்டும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, அந்த அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பசிக்காக தவிக்கும் பச்சிளம் குழந்தைக்கு பாலுாட்ட முடியாமல், தாய்மார்கள் தவிப்புக்குள்ளாகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் இதனை கவனித்து, தாய்மார்கள் பாலுாட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.