/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் இன்று மனுக்கள் பெற நடவடிக்கை
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் இன்று மனுக்கள் பெற நடவடிக்கை
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் இன்று மனுக்கள் பெற நடவடிக்கை
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் இன்று மனுக்கள் பெற நடவடிக்கை
ADDED : டிச 10, 2024 01:39 AM
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்
இன்று மனுக்கள் பெற நடவடிக்கை
ராசிபுரம், டிச. 10-
'ராசிபுரம் பகுதியில், வரும், 18ல் நடக்கும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமிற்கு, இன்று மனுக்கள் பெற உள்ளதாக, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் விரைவில் கிடைக்க தமிழக அரசு, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய உள்ளது.
ராசிபுரம் தாலுகாவில், வரும், 18ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடக்கிறது. முன்னதாக, இன்று கீழ்கண்ட இடங்களில் மனுக்கள் பெறப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இந்த முகாமில் அளிக்கலாம். அதன்மீது, 18ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், வெண்ணந்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், முள்ளுக்குறிச்சி ஆர்.ஐ., அலுவலகம் ஆகிய இடங்களில் மனுக்கள் பெறப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.