/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை
/
மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை
மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை
மண் கடத்திய லாரி பறிமுதல்: உரிமையாளர், டிரைவருக்கு வலை
ADDED : ஏப் 18, 2025 01:52 AM
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, கொண்டம்பட்டி பகுதியில் தொடர்ந்து கிராவல் மண் வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் உத்திரவுப்படி, சிதம்பரப்பட்டி வி.ஏ.ஓ., சுதா, உதவியாளர் ஜென்சியா ஆகியோர், நேற்று அதிகாலை கொண்டம்பட்டிமேடு பைபாஸ் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவியாம்பாளையம் ஊருக்குள் இருந்து கொண்டம்பட்டி மேட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரியை, வருவாய்த்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூன்று யூனிட் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய்த்துறையினர் லாரி டிரைவரிடம் மண் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை கேட்டனர். வண்டியில் உள்ள ஆவணத்தை எடுக்க சென்ற டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார். வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர், டிரைவரை தேடி வருகின்றனர்.