/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மோதியதில் லாரி டிரைவர் படுகாயம்
/
டூவீலர் மோதியதில் லாரி டிரைவர் படுகாயம்
ADDED : அக் 29, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, ரங்கனுாரை சேர்ந்தவர் பழனியப்பன், 62; லாரி டிரைவர். இவர், லாரியை சேலம்-கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில் பேக்கரி ஒன்றில் நிறுத்திவிட்டு டீ குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரில் வந்தவர், பழனியப்பன் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த பழனியப்பனை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான, டூவீலர் ஓட்டிவந்த, மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

