ADDED : நவ 25, 2025 01:59 AM
நாமக்கல்,நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முட்டை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல்லில் ஏராளமான கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. அவைகளில் சேகரிக்கப்படும் முட்டைகளை, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு முட்டை லோடு ஏற்றி செல்வதற்காகவே ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணிக்கு, நாமக்கல் அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்து வாழவந்தியில் செயல்படும் கோழிப்பண்ணைகளில் முட்டை ஏற்றுவதற்காக முட்டை லாரி ஒன்று சென்றது. லாரியை வையப்பமலையை சேர்ந்த சதீஸ், 28, என்பவர் ஓட்டி சென்றார். லாரி, தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
அதில் சதீஸூக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் ஏற்படவில்லை. சாலையில் லாரி கவிழ்ந்ததால், ரெக்கவரி வாகனம் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தப்பட்டது. அதனால், வாகன போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நல்லிபாளையம் போலீசார்
விசாரனை நடத்தினர்.

