ADDED : டிச 04, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, டிச. 4-
தடை செய்யப்பட்ட லாட்டரி
விற்றவரை, எருமப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி அருகே, கோணங்கிப்பட்டியை சேர்ந்தவர் ரத்தனகிரி, 43. இவர், நேற்று அலங்காநத்தம் பிரிவில் சாலையில் நின்றுகொண்டு, தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்று வந்தார். இதுகுறித்து புகார்படி அங்கு சென்ற எருமப்பட்டி போலீசார், லாட்டரி விற்ற ரத்தனகிரியை கைது செய்தனர்.

