ADDED : டிச 26, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாட்டரி விற்றவர் கைது
குமாரபாளையம், டிச. 26-
குமாரபாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.,க்கள் நடராஜன், தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் பழனிசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பாபு, 45, என்ற நபரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல்
செய்தனர்.