/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கவர்னரை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கவர்னரை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், தமிழக கவர்னர் ரவி, புத்தக விழாவில், மா.கம்யூ., கட்சியின் தத்துவமேதை காரல் மார்க்ஸ் பற்றியும், மார்க்சியத்தை பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருகிறார். அவர் கூறிய கருத்துகளை வாபஸ்பெற வேண்டும்.
ஆளுநரை மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று, மா.கம்யூ சார்பில், எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில், ஒன்றிய குழு உறுப்பினர் கிட்டுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், மாவட்ட குழு உறுப்பினர் கவிதா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

