/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
/
மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : டிச 02, 2025 02:39 AM
குமாரபாளையம், குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் பகுதியில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள், பஞ்சமுக மகா வீர ஆஞ்சநேயர் கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் துவங்கியது.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடம் எடுத்து வரப்பட்டு, இரண்டு நாட்களாக யாக சாலையில் பூஜை செய்யப்பட்டன. நேற்று காலை, 6:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை கருடானந்தா மகராஜ் சரஸ்வதி சுவாமிகள், ஈரோடு ஸ்ரீ விஜய சுவாமிஜி, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., கிருஷ்ணன் கவுதம், இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக தீர்த்தம், 'ட்ரோன்' மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

