/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகாநவமி நவராத்திரி உற்சவம் 15 யானைகள் அணிவகுப்பு
/
மகாநவமி நவராத்திரி உற்சவம் 15 யானைகள் அணிவகுப்பு
ADDED : அக் 02, 2025 02:12 AM
பாலக்காடு, கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மகாநவமி நவராத்திரி உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது.
அதிகாலை நிர்மால்ய தரிசனத்துடன் கோவில் நிகழ்வுகள் துவங்கின. காலை, 7:00 மணிக்கு யானைகளுக்கு உணவளிக்கும் 'யானையூட்டு' நிகழ்ச்சி நடந்தது. 7:30 மணிக்கு அயிலூர் அனந்தநாராயணன் மாராரின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய யானைகள் அணிவகுப்பில் 'காழ்ச்ச சீவேலி' நடந்தது.
அதன்பின், காலை, 10:30 மணிக்கு பெருவனம் சதீசன் மாரார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற 'பஞ்சாரிமேளம்' என்ற செண்டைமேளம் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 4:30 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், பூக்காவடி, நாதஸ்வரம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்து மணி வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது.
இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அதன்பின், நாதஸ்வர கச்சேரி, 'பாண்டிமேளம்' ஆகியவை நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல், அக். 2
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்றும், இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை (அக்.,3) 1 மி.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சம், 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும், அதிகபட்சம், 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே, 10 கி.மீ., 12 கி.மீ., மற்றும் 10 கி.மீ., வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம், 40 சதவீதமாகவும், அதிகபட்சம், 80 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்தவரையில், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் ஜூலை முதல் அக்., மாதம் வரை அதாவது பருவமழை தொடங்கியவுடன் உள்ள காலமானது இனவிருத்தி காலம் ஆகும். ஆடுகளில் இனசேர்க்கை பருவமானது தீவன அளவையும், தட்பவெப்ப நிலையையும் பொறுத்து அமையும். எனவே இந்த காலங்களில் கூடுதலாக அடர்தீவனம் அளித்தால் மந்தையில், அதிக எண்ணிக்கையிலான ஆடுகள் பருவத்திற்கு வந்து இனசேர்க்கைக்கு உட்பட்டு அதிக அளவிலான குட்டிகள் ஈன வாய்ப்பு உள்ளது. மேலும் குட்டிகளின் பிறப்பு எடையும் சீராக இருக்கும்.
இதேபோல், தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட பன்றி குட்டிகளின் கொட்டகையின் தரையை உப்பு கரைசல் நீர் அல்லது தரம் வாய்ந்த கிருமிநாசினிகளை கொண்டு வராம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இது ஈகோலை கிருமியினால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கும். இல்லை எனில் பன்றி குட்டிகளில் கழிச்சல் நோய் ஏற்பட்டு, இறப்பு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.