/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
/
ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
ADDED : நவ 26, 2024 01:11 AM
ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
மோகனுார், நவ. 26-
நாமக்கல் - மோகனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, மோகனுார் அருகே ரயில் தண்டவாளத்தில், 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக கிடந்தவர், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர், சிமென்ட் கலரில், வெள்ளை நிற கோடு போட்ட டி-சர்ட்டும், ஊதா நிற லுங்கியும் அணிந்திருந்தார். அவர் யார்? பெயர் என்ன? எந்த ஊர்? போன்ற விபரம் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.