ADDED : டிச 27, 2024 07:34 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, ஐ.டி., பெண் ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டி ஒட்டியப்பன் கோவில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகள் லாவண்யா, 34; எம்.சி.ஏ., முடித்துவிட்டு ஐதராபாதில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது, வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். நேற்று காலை, லாவண்யா தன் டூவீலரில் நாமகிரிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் அதேப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் பழனிவேல், 46, நின்று கொண்டிருந்தார்.
லாவண்யா மோதுவது போல் வண்டியில் சென்றதாக நினைத்துக்கொண்டு, தகாத வார்த்தையில் பழனிவேல் பேசியுள்ளார். இதைக்கேட்டு நின்ற லாவண்யா கன்னத்தில் பழனிவேல் அறைந்துள்ளார். இதுகுறித்து லாவண்யா கொடுத்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், பழனிவேலை கைது செய்தனர்.

