ADDED : நவ 17, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பா காலனியை சேர்ந்த, 17 வயது பிளஸ்- 1 மாணவர். கடந்த, 14ல், நண்பர்களுடன், என்.கொசவம்-பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், 38, என்பவர், ஏன் சத்தமாக பேசுகிறீர்கள் என, தட்டிக்கேட்-டுள்ளார். தொடர்ந்து, மாணவர் இமய பிரசாந்தை கட்டையால் தாக்கினார். இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் சவுந்தர்ரா-ஜனை கைது செய்தனர்.இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் இடம்பெற்-றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

