/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சம்பள தகராறில் ஊழியர் கழுத்தை அறுத்தவர் கைது
/
சம்பள தகராறில் ஊழியர் கழுத்தை அறுத்தவர் கைது
ADDED : ஆக 25, 2025 11:59 PM

நாமக்கல்:
நாமக்கல்லில், சம்பள தகராறில் ஹோட்டல் ஊழியரை, கத்தியால் கழுத்தை அறுத்த சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், பேரூரை சேர்ந்தவர் தனபால், 40; நாமக்கல் நல்லிபாளையத்தில் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கிறார்.
தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 24; இவரை ஒரு மாதத்துக்கு முன் தனபால், தான் வேலை பார்க்கும் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்து விட்டார்.
சுந்தரத்துக்கு இரு வாரங்களாக சம்பளம் தரப்படவில்லை என தெரிகிறது. கணக்கு வழக்குகளை தனபால் பார்த்து வருவதால், சுந்தரம், சம்பளம் குறித்து, நேற்று முன்தினம் இரவு, தனபாலிடம் கேட்டார். பின், இருவரும் சேர்ந்து ஹோட்டலில் மது அருந்தி உள்ளனர்.
போதையில், சம்பளம் குறித்து மீண்டும் கேட்ட சுந்தரம், கத்தியால் தனபாலின் தோள்பட்டை, கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் அறுத்துவிட்டு தப்பினார்.
அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த தனபாலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். புகாரில், நல்லிபாளையம் போலீசார், சுந்தரத்தை, நேற்று மதியம் கைது செய்தனர்.