ADDED : ஜன 20, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், கதிராநல்லுார், கண்ணுார் பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 50. இவருக்கும், இவரது அண்ணன் மகன் குமரவேல், 38, என்பவருக்கும், கதிராநல்லுாரில், 2 ஏக்கர் விவ சாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை பிரிப்பதில் இருவருக்கும், கடந்த சில ஆண்டுகளாக மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த, 18 மாலை, 3:00 மணியளவில் கோபாலகிருஷ்ணன் மளிகை கடை வைத்துள்ள இடத்திற்கு, குமரவேல் சென்று நிலத்தை பிரிப்பது குறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு குமரவேல், வைத்திருந்த கொடுவாளால் கோபாலகிருஷ்ணனை வெட்டியுள்ளார். இதில், கோபால கிருஷ்ணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார், குமரவேலை கைது செய்தனர்.