ADDED : செப் 30, 2025 01:42 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் கிராமம், கொலக்கமேடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் கந்தசாமி, 55; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அக்கரைக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சின்ராஜ், 31, ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கந்தசாமி நிலத்தில் உள்ள உரத்தை அள்ள லாரி ஒன்று வந்தது. லாரி டிரைவர் சரத்குமார் பொது தடத்தில் லாரியை நிறுத்தியுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சின்ராஜ் தகாறு செய்துள்ளார். விசாரிக்க வந்த கந்தசாமியை, சின்ராஜ் தன் கையில் இருந்த கொடுவாளால் வெட்டினார். இதில், கந்தசாமி காது, கண்ணம் ஆகியவை கிழிந்தது. டிரைவர் சரத்குமார் சத்தம் போடவே, சின்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் கந்தசாமியை மீட்டு முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார்
வழக்குப்பதிந்து சின்ராஜை கைது செய்தனர்.