ADDED : ஜூன் 03, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு வடக்கு ரத வீதியில் உள்ள, இரண்டு ஜவுளிக்கடைகளில் புகுந்த மர்ம நபர்கள், 'சிசிடிவி' கேமராவை ஆப் செய்துவிட்டு, நுாதன முறையில், பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை பிடிக்க, திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர், சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே பணத்துடன் நின்று கொண்டிருந்த பெங்களூருவை சேர்ந்த நாகராஜ், 29, என்பவரை கைது செய்து, 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான, கைது செய்யப்பட்டுள்ள நாகராஜின் உறவினரை வலைவீசி தேடி வருகின்றனர்.
