/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டவருக்கு சாகும் வரை ஆயுள்
/
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டவருக்கு சாகும் வரை ஆயுள்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டவருக்கு சாகும் வரை ஆயுள்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டவருக்கு சாகும் வரை ஆயுள்
ADDED : ஜூலை 15, 2025 01:57 AM
திருப்பத்துார், ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட வாலிபருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை தலா, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், திருப்பத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூரை சேர்ந்தவர் டைலரிங் தொழிலாளி ரேவதி, 36. இவர், 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த பிப்., 6ம் தேதி, ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த மங்கள சமுத்திரத்திலுள்ள தாய் வீட்டிற்கு செல்ல, திருப்பதி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெண்கள் பொது பெட்டியில் பயணம் செய்தார். ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சென்றவுடன், ரேவதி மட்டும் அப்பெட்டியில் தனியாக இருந்தார்.
அப்போது, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ், 27, என்பவர் ஏறி, ரேவதியை தாக்கி, அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். எதிர்ப்பு தெரிவித்த ரேவதியை, குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனிற்கும், கே.வி.குப்பம் ரயில்வே ஸ்டேஷனிற்கும் இடையே ரயில் சென்றபோது, கீழே தள்ளி விட்டார். ரயில் காட்பாடி சென்றவுடன் ஹேமராஜ் இறங்கி தப்பினார்.
ரயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரேவதியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது, ரயிலில் இருந்து விழுந்ததில் ரேவதியின் கர்ப்பம் கலைந்தது தெரியவந்தது. போலீசார், 8 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ஹேமராஜை கடந்த பிப்., 7ல், கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பத்துார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, கடந்த, 11ல், ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். தண்டனை விபரம், 14ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்த நிலையில், நேற்று குற்றவாளி ஹேமராஜிற்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை, 60,000 ரூபாய் அபராதம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை தலா, 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.