/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீரான தண்ணீர் வினியோகிக்க மரப்பரை கிராம மக்கள் மனு
/
சீரான தண்ணீர் வினியோகிக்க மரப்பரை கிராம மக்கள் மனு
சீரான தண்ணீர் வினியோகிக்க மரப்பரை கிராம மக்கள் மனு
சீரான தண்ணீர் வினியோகிக்க மரப்பரை கிராம மக்கள் மனு
ADDED : ஆக 05, 2025 01:26 AM
நாமக்கல், சீரான முறையில் தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மரப்பரை கிராம மக்கள் நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், மரப்பரையில், 40 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதில், தினமும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஆனால், எங்களுக்கு, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதேபோல், குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே விடப்படுகிறது. அதனால், எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அதனால், தண்ணீர் பற்றாக்குறையால் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். சீரான முறையில் தண்ணீர் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.