/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி வழிபாடு
ADDED : டிச 26, 2025 05:35 AM
மல்லசமுத்திரம்:சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள,
பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று மார்-கழி மாத சஷ்டி திதியை முன்னிட்டு காலை 6:00 முதல் மாலை வரை மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்-பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.* சேந்தமங்கலம்,- நாமக்கல் பிரதான ரோட்டில் அமைந்துள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள உற்சவருக்கு, வாசனை திரவி-யங்கள் கொண்டு சிறப்பு
அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* வெண்ணந்துார் ஒன்றியம், கல்லாங்குளம் அண்ணா
மலையார் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி
முருகப்பெருமானுக்கு, சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பஞ்சா-மிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது. கல்லாங்குளம், பட்டணம், ஆர்.புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
* ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது. அதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்-தனுார் பச்சைமலை முருகன் கோவில்களில், சஷ்டியை
முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

