ADDED : டிச 26, 2025 05:34 AM

நாமக்கல்: நாமக்கல்லில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்-றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மணிக்கூண்டு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப் படத்-திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். 'நுாற்றாண்டு நாயகருக்கு புகழ் வணக்கம்' என்ற தலைப்பில் நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் விழாவை பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தேச வளர்ச்சிக்கான பங்களிப்பு, கொள்கை, பொது நிர்வாகம், சாலை, பொக்ரான் அணு ஆயுத சோதனை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள், அதன் மூலம் நாட்டு மக்கள் அடைந்த நன்மைகள் குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.
நாமக்கல்லில் நடந்த விழாவில் நகர தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்-பினர் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் வழக்குரைஞர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்-றியத்தலைவர் சரவணன், கிழக்கு ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்-சியில் கண்ணன் தலைமை வகித்தனர். இதேபோல், ராசிபுரம், ஆண்டகலுார் கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

