/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் விழா அலகு குத்தி நேர்த்திக்கடன்
/
மாரியம்மன் கோவில் விழா அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED : மே 07, 2024 07:29 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 10 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. பூச்சாட்டுதல் தொடங்கியதும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் சிறப்பு அபிஷேகம், பூஜை, மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், நேற்று போயர் சமுதாயம் சார்பில் மண்டகப்படி, அபிஷேகம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் விமான அலகு, பட்டாக்கத்தி அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சங்க தலைவர் கோவிந்தன் விழாவிற்கு தலைமை வகித்தார். நாளை காலை தீமிதி விழாவும், மாலை திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.