/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் திருவிழா கடவுள் வேடமிட்டு அசத்தல்
/
மாரியம்மன் கோவில் திருவிழா கடவுள் வேடமிட்டு அசத்தல்
மாரியம்மன் கோவில் திருவிழா கடவுள் வேடமிட்டு அசத்தல்
மாரியம்மன் கோவில் திருவிழா கடவுள் வேடமிட்டு அசத்தல்
ADDED : ஏப் 27, 2025 04:05 AM
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுல்தான்பேட்டையில் புது மாரி-யம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்-டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.
அதேபோல், நடப்பாண்டு வரும், 22ல் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி-யுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்-தர்கள் தினந்தோறும் காலை, காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து கோவில் முன்பு உள்ள கம்பத்திற்கு ஊற்றி வழி-பாடு செய்து வருகின்றனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று மாரியம்மன் மயில் வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. மேலும், நேற்று மாலை, நடன கலைஞர்கள் சிவன், பார்வதி, லட்சுமி, மாரியம்மன், கருப்-புசாமி, முருகர் என, சுவாமி வேடமணிந்து நடனமாடியது பக்-தர்களை வெகுவாக கவர்ந்தது. வரும், 29ல் பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ல், பொங்கல் மாவிளக்கு, கிடாவெட்டு, அலகு குத்துதல், மே, 1ல் கம்பம் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி, 2ல் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.