/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மருதுார் டவுன் பஞ்.,அவசர கூட்டம்
/
மருதுார் டவுன் பஞ்.,அவசர கூட்டம்
ADDED : ஜன 11, 2025 01:31 AM
மருதுார் டவுன் பஞ்.,அவசர கூட்டம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கூட்டரங்கில் அவசர கூட்டம் டவுன் பஞ்.,தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். டவுன் பஞ்., பகுதியில் குறு தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 750 ரூபாய், அதிகபட்ச கட்டணமாக, 2,000 ரூபாய், சிறு தொழில் நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம், 2,000 ரூபாய், அதிகபட்சமாக, 3,500, நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறைந்த கட்டணம், 5,000, அதிக பட்சமாக, 8,000 ரூபாய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.