ADDED : செப் 26, 2025 02:21 AM
ராசிபுரம் ;ராசிபுரத்தில், ராமசாமி உடையார் நினைவாக சென்னை ராமசந்திரா மருத்துவமனை சார்பில், 25ம் ஆண்டாக இலவச பொது மருத்துவ முகாம், நாளை மற்றும் நாளை மறுநாள் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், சரும நோய், காது, மூக்கு, தொண்டை, இதய நோய், முடநீக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், பேச்சு மொழி, கேட்பியல், பல் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் பரிசோதனை நடக்கவுள்ளது.
ரத்த பரிசோதனை, இசிஜி, 2டி ஸ்கேன், எக்கோ, அல்ட்ரா சவுண்டு, மார்பக புற்றுநோய் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை போன்ற சிறப்பு பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. முகாமில், 160க்கும் மேற்பட்ட துறை சார்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்யவுள்ளனர். பரிசோதனைக்கு பின் பரிந்துரை பேரில், 15 பேருக்கு காது கேட்கும் கருவி, 1,000 பேருக்கு கண் கண்ணாடி, 25 பேருக்கு முழு பல்செட் வழங்கப்படும். பல்செட் தேவைப்படுவோர் இன்றே
நேரடியாக சென்று பல் அளவு தர வேண்டும்.