/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரத்தில் 4ல் மருத்துவ முகாம்
/
மல்லசமுத்திரத்தில் 4ல் மருத்துவ முகாம்
ADDED : செப் 27, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரும், 4ல் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது.
இதில், பொது மருத்துவம், இருதய நோய், கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, அறுவை சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் இலவச முழுஉடல் பரிசோதனை நடக்கிறது. பயனாளிகள் ஆதார்கார்டுடன் வந்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.