/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் கிடைத்த இடைக்கால கல்வெட்டு
/
கொல்லிமலையில் கிடைத்த இடைக்கால கல்வெட்டு
ADDED : அக் 26, 2025 01:50 AM

நாமக்கல்: தஞ்சை தமிழ் பல்கலை ஆய்வாளர்களால், கொல்லிமலையில் இடைக்கால வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலை கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை இணைப் பேராசிரியர் செல்வகுமார் தலைமையில், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பஷீர் அகமது, கார்த்திகேயன் ஆகியோர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நெடுவலம்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இடைக்கால வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது.
பேராசிரியர் செல்வ குமார் கூறியதாவது:
இந்த கல்வெட்டில், 'ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய பட்டணம் ஹர' என்ற வரி உள் ளது. நடுவில் வணிகர் தெய்வமான துர்க்கை - பரமேஸ்வரி ஒரு பீடத்தின் மீது உள்ளது.
தெய்வத்தின் அருகில், காலை பீடத்தின் மீது வைத்து, உயர்த்திய வாலுடன் சிங்கம் உள்ளது. இக்கல்வெட்டு விளக்கு, சாமரம் உள்ளிட்ட பல வணிகக்குழு சின்னங் களுடனும் உள்ளது.
கொல்லிமலையில் இடைக்கால வணிகர்கள் வேளாண் பொருள்களை சேகரித்து வணிகம் செய்திருக்க வேண்டும்; இது கி.பி.,12ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.
இவ்வாறு கூறினார்.

