/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் மெகா சைஸ் குழி காத்திருக்குது விபத்து அபாயம்
/
சாலையில் மெகா சைஸ் குழி காத்திருக்குது விபத்து அபாயம்
சாலையில் மெகா சைஸ் குழி காத்திருக்குது விபத்து அபாயம்
சாலையில் மெகா சைஸ் குழி காத்திருக்குது விபத்து அபாயம்
ADDED : நவ 16, 2025 02:34 AM
நாமக்கல்: நாமக்கல், பூங்கா சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் குழியால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மருத்துவக்கல்-லுாரி, புது பஸ் ஸ்டாண்ட், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் பூங்கா சாலை, உழவர் சந்தை பிரிவு, கோட்டை சாலை வழியாக செல்லும். அது நகரின் ஒருவழிச்சாலையாக நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் பூங்கா சாலையில், அம்மா பூங்கா வாசலில் மெகா சைஸ் குழி ஏற்பட்டுள்ளது.
அந்த குழி தற்போது நான்கு ஆடிக்கும் மேல் உள் வாங்கிய நிலையில் உள்ளது. பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், உழவர் சந்-தைக்கு சென்று வருவோர் அந்த குழியால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், அப்பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்தை தடுக்கும் வகையில், குழியை சுற்றி பேரிகார்டுகள் வைக்க வேண்டும் அல்-லது குழியை மூடி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

