/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த கொள்ளைகளில் 'மேவாட்' கும்பலுக்கு தொடர்பு
/
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த கொள்ளைகளில் 'மேவாட்' கும்பலுக்கு தொடர்பு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த கொள்ளைகளில் 'மேவாட்' கும்பலுக்கு தொடர்பு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த கொள்ளைகளில் 'மேவாட்' கும்பலுக்கு தொடர்பு
ADDED : செப் 29, 2024 03:12 AM
நாமக்கல்: ''மேவாட் கொள்ளையர்களுக்கு, தமிழகம், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய, ஐந்து மாநிலங்களில் நடந்த, ஏ.டி.எம்., கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது,'' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கூறினார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்புடைய, ஐந்து பேரை, நீதிமன்ற காவ-லுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கொள்ளையர்களிடம், ஆந்திரா, கேரளா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஒடிசா மாநில போலீசார், விபரங்களை கேட்-டுள்ளனர். அங்கும், 'ஹூண்டாய்' காரில் வந்து கொள்ளை சம்ப-வத்தை அரங்கேற்றி உள்ளதாக, எஸ்.பி., பேசினார். அவருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.திருச்சூர் ஏ.டி.எம்., கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய-வர்கள், ஏழு பேர் மட்டும் தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என, விசாரித்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு உள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரு வழக்கில், சிறையில் இருந்துள்ளனர். இவர்களில், ஒரு சிலர் மீது வழக்குகள் இல்-லாமல் உள்ளனர். ஒரு சிலர் மீது ஒன்று, இரண்டு வழக்குகளும், ஒருவருக்கு, நான்கு, ஐந்து வழக்குகளும் உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அனைத்து ஏ.டி.எம்., மையங்களிலும் பாதுகாப்பு உபகரணங்க-ளான, 'சிசிடிவி' மற்றும் அலாரம் உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தி உள்ளனர். அவை, சரியானபடி வேலை செய்கிறதா? பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறதா? என, கேள்விக்குறி எழுந்-துள்ளது. அவற்றை மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தவிர, முக்கிய இடங்களில், செக்யூ-ரிட்டி நியமிக்க அறிவுறுத்தி உள்ளோம். குறைபாடுள்ள ஏ.டி.எம்.,களை குறிவைத்து தான் கொள்ளை சம்பவத்தை அரங்-கேற்றுகின்றனர். அவ்வாறு உள்ள ஏ.டி.எம்., மையங்களில், கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள அறிவுறுத்த உள்ளோம்.
ஏ.டி.எம்., கொள்ளையர்களிடம், 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவி-டுவோம். ஹரியானா, ராஜஸ்தான் மாநில எல்லையில், 'மேவாட்' என்ற பகுதி உள்ளது. இவர்கள் அனைவரும், அங்குள்ள இரண்டு மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொள்ளையர்களை பிடிக்கும் பணியில், நாமக்கல் மாவட்ட போலீசார் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.