ADDED : ஆக 12, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை பகுதியில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு, 7:00 மணிக்கு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, அரியாகவுண்டம்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, ஜேடர்பாளையம், ஒடுவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், இரவு, 10:00 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வயல்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு மட்டும், 27 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.