/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணியாளரை தாக்கிய மில் உரிமையாளர் கைது
/
பணியாளரை தாக்கிய மில் உரிமையாளர் கைது
ADDED : டிச 24, 2025 07:46 AM

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் செந்-தில்குமார், 38; இவர், தேங்காய் மட்டை உறிக்கும் மில் நடத்தி வருகிறார்.
அங்கு பணிபுரிபவர், புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராசாத்தி, 40; கடந்த, 2ல் மில்லிற்கு வந்த இருவர், ராசாத்தி-யிடம், மில் உரிமையாளரின் மொபைல் எண்ணை கேட்டுள்-ளனர். அப்போது ராசாத்தி, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை காட்டி அதில் மொபைல் போன் எண் உள்ளது என, தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மில்லுக்கு வந்த செந்தில்குமார், 'ஏன் எனது மொபைல் எண்ணை அவர்களிடம் வழங்கவில்லை' எனக்-கேட்டு, ராசாத்தியை தாக்கியுள்ளார். இதுகுறித்து, ராசாத்தி அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், செந்தில்குமாரை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்-செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

