/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மினி டைடல் பார்க் அறிவிப்பு: எம்.பி.,க்கு மாணவரணி பாராட்டு
/
மினி டைடல் பார்க் அறிவிப்பு: எம்.பி.,க்கு மாணவரணி பாராட்டு
மினி டைடல் பார்க் அறிவிப்பு: எம்.பி.,க்கு மாணவரணி பாராட்டு
மினி டைடல் பார்க் அறிவிப்பு: எம்.பி.,க்கு மாணவரணி பாராட்டு
ADDED : ஆக 12, 2025 02:15 AM
நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன் வரவேற்றார். அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநில மாணவர் அணி துணை செயலாளர்கள் தமிழரசன், வீரமணி ஜெயக்குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் படித்த, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், 'மினி டைடல் பார்க்' உருவாக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான முயற்சி மேற்கொண்ட மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார், எம்.பி., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அவை தலைவர் மணிமாறன், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கார்த்தி, கவுதம், ராம் மணிகண்டன், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.