/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணியை முடிக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர்

ADDED : அக் 26, 2025 12:21 AM
ராசிபுரம், ''குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணியை முடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் மதிவேந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவியர் தங்கி படிக்க, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் விடுதி கட்டும் பணி நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ''வேலையை எப்போது தொடங்கினீர்கள்,'' என, அதிகாரிகளிடம் கேட்டார். கடந்த, 7 மாதங்களாக பணி நடந்து வருதாக, ஒப்பந்ததாரர் கூறினார். இதனால், கோபமடைந்த அமைச்சர், ''பிப்ரவரி மாதத்திற்குள் பணியை முடிக்க வேண்டும்; இல்லை என்றால் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் விடுவேன்; இனி வேறு எந்த பணிகளும் உங்களுக்கு கொடுக்க மாட்டேன்; சொந்த தொகுதியிலேயே இந்த நிலைமையா,'' என பேசிவிட்டு சென்றார். டி.ஆர்.ஓ., சுமன், தாசில்தார் சசிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.