/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
/
மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
ADDED : அக் 26, 2025 12:23 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தனுார், அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், மின்னக்கல், தேங்கல்பாளையம், குட்டலாடம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் செங்கல் உற்பத்தி தொழில் நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் செங்கல்கள், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களாக வெண்ணந்துார் சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், செங்கல் அறுத்து காயவைக்க முடியாத நிலை உள்ளது.
காய வைத்தாலும், அவற்றை செங்கல் சூளையில் வைத்து வேக வைக்க முடியவில்லை. வெண்ணந்துார் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கட்டுமான பணிகளும் பாதித்து செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் மட்டுமில்லாது, கட்டுமான தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

